செவ்வாய்ப் பேட்டை, சேலம் - 636 002
வங்கி வாடிக்கையாளரிடமிருந்து பொது மக்களிடமிருந்தும் கீழ்கண்டவாறு இட்டு வைப்புகளை பெற்று தன்னுடைய நிதி ஆதாரத்தினை பெருக்கிக் கொண்டு கடன்கள் வழங்கி வருகிறது.
மேற்படி இட்டு வைப்புகளை குறித்து கீழ்கண்டவாறு சற்று விரிவாக காண்போம்:
வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்தும் பொது மக்களிடமிருந்து நிரந்தர இட்டு வைப்புகளை பெற்று வருகிறது. அதற்கான காலம் மற்றும் வட்டி விகிதம் தற்போது 01.06.2024 முதல் வங்கி கீழ்கண்டவாறு வழங்கி வருகிறது.
# | காலம் | பொது மக்களுக்கு | மூத்த குடிமக்களுக்கு |
---|---|---|---|
1 | 30 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை | 4.00% | 4.00% |
2 | 91 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை | 4.25% | 4.25% |
3 | 181 நாட்கள் முதல் 364 நாட்கள் வரை | 5.25% | 5.25% |
4 | 1 வருடம் மற்றும் அதற்கு மேல் | 7.25% | 7.75% |
5 | சிறப்பு இட்டு வைப்பு 444 நாட்கள் | 8.25% | 8.25% |
இந்த இட்டு வைப்புகளுக்கு உண்டான வட்டியினை டெபாசிட்தாரர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாதத்திற்கு ஒரு முறையோ மூன்று மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது முடிவு பெறும் தேதியிலோ வட்டியினை பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது.மேற்படி டெபாசிட்தாரர்கள் செய்யும் டெபாசிட்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியினால் ஏற்படுத்தப்பட்ட டெபாசிட் இன்சூரன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. ஒரு தனி நபர் அதிகபட்சமாக ரூபாய் 5 இலட்சம் வரை இன்சூரன்ஸ் வசதி பெறலாம். இவ்வாறு செய்யப்பட்டுள்ள இட்டு வைப்பு இரசீதின் மீது 85% வரை கடன் பெறும் வசதியும் உள்ளது. அவ்வாறு கடன் பெறும் பொழுது டெபாசிட் வட்டியை விட 2% கூடுதலாக வட்டி பெறப்படும்.
வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரிகளின் நன்மைகளுக்காக வங்கியில் நடப்பு கணக்கு துவங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. வியாபாரிகள் தங்களின் வியாபார நிறுவனத்தின் பெயரில் நடப்பு கணக்கு நமது வங்கியில் துவங்கி பயன் பெறலாம். மேற்படி கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கு காசோலைகளை வங்கியிலிருந்து பெற்று வரவு செலவு செய்யலாம். மேற்படி கணக்கில் உள்ள தொகைக்கு வட்டி கணக்கிட்டு வழங்கப்படாது.
வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்களின் சேமிப்புகளை ஊக்குவிக்கும் பொருட்டு அதெற்கென பிரத்தியோகமாக சேமிப்பு கணக்கு வங்கியில் துவங்கி வரவு செலவு செய்துவரும் வசதி உள்ளது. இக்கணக்கில் நிலுவையில் வைத்திருக்கும் தொகைக்கு ஒவ்வொரு நாள் வீதம் வட்டி கணக்கீடு செய்யப்பட்டு மூன்று மாதத்திற்கு ஒருமுறை 2% வட்டி வழங்கப்பட்டு வருகிறது. மேற்படி கணக்குகளை தொடர்ந்து வரவு செலவு செய்து வரவேண்டும். மேற்படி தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வரவு செலவு செய்யப்படாத கணக்குகள் செயலற்ற கணக்குகளாக (In-Operative Accounts) கருதி செயலற்ற கணக்குகள் பட்டியலில் சேர்க்கப்படும். மேற்படி கணக்குகளில் வரவு செலவு செய்வதற்கு வங்கியிலிருந்து காசோலை பெற்று பயன்படுத்தும் வசதி உள்ளது.
சேமிப்பு கணக்கு துவங்கியுள்ள வாடிக்கையாளர்களும் பொது மக்களும் அதிக வட்டி பெறும் வகையிலும் சேமிப்பை ஊக்குவிக்கும் வகையிலும் இப்பகுதி மக்களின் வசதிக்காக தொடர் இட்டு வைப்பு கணக்கு துவங்கி வரவு செலவு செய்து வரும் வசதியுள்ளது. இக்கணக்குகளில் ரூ.100 அல்லது 100-ன் மடங்கில் தொகைகளை ஓராண்டிற்கோ இரண்டாண்டிற்கோ அல்லது அதிகபட்சமாக 5 ஆண்டிற்கோ இட்டு வைப்பு செய்து வைக்கலாம். இதற்கென கணக்கு துவங்கும் பொழுது செலுத்தப்பட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் துவங்கப்பட்டு நாளுக்கு முன்னர் குறிப்பிட்ட காலம் வரை செலுத்தி வர வேண்டும். மேற்படி டெபாசிட்டுக்கு உரிய முதிர்வு தேதியில் தான் செலுத்திய தொகைக்கு வட்டி கணக்கீடு செய்து தவணைத்தொகையும் மற்றும் வட்டியும் சேர்த்து மொத்த தொகையும் வழங்கப்படும். இவ்வாறு டெபாசிட் செய்து வரும் நிலையில் டெபாசிட்தாரர்களுக்கு பணத்தேவை ஏற்படுமாயின் இவ்வகையான டெபாசிட்டிலிருந்து செலுத்தியுள்ள தொகையில் 85% கடன் பெரும் வசதியுள்ளது. இதற்கான வட்டி வங்கியில் செய்யப்பட்டுள்ள இட்டு வைப்புக்கு வழங்கும் வட்டி விகிதத்தில் 2% கூடுதலாக சேர்த்து கடன் தொகைக்கு வட்டி வசூலிக்கப்படும்.
வங்கியின் வாடிக்கையாளர்களும் பொது மக்களும் தங்கள் வியாபாரத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை சிறு சேமிப்பாக கருதி நமது வங்கியில் தினசரி சேமிப்பு கணக்கு திட்டத்தில் கணக்கு துவங்கி தினசரி ஒரு குறிப்பிட்ட தொகையை 100 நாட்களுக்கு செலுத்தி முதிர்வு தேதியன்று செலுத்தியுள்ள தொகை மற்றும் அதற்கான வட்டி பெறும் வசதியுள்ளது. அதிக வட்டி பெறும் வகையிலும் சேமிப்பை ஊக்குவிக்கும் வகையிலும் இப்பகுதி மக்களின் வசதிக்காக இந்த கணக்கு துவங்கி வரவு செலவு செய்து வரும் வசதியுள்ளது. இக்கணக்குகளில் ரூ.100 முதல் தாங்கள் விரும்பும் தொகையினை 100-ன் மடங்கில் செலுத்தி வரும் வாய்ப்பு உள்ளது. இதற்கென கணக்கு துவங்கும் பொழுது செலுத்தப்பட்ட தொகையை ஒவ்வொரு நாளும் விடுதலின்றி குறிப்பிட்ட காலம் வரை செலுத்தி வர வேண்டும். இவ்வாறு டெபொசிட் செய்து வரும் நிலையில் டெபாசிட்தாரர்களுக்கு பணத்தேவை ஏற்படுமாயின் இவ்வகையான டெபாசிட்டிலிருந்து செலுத்தியுள்ள தொகையில் 85% கடன் பெறும் வசதியுள்ளது. இதற்கான வட்டி வங்கியில் செய்யப்பட்டுள்ள இட்டு வைப்புக்கு வழங்கும் வட்டி விகிதத்தில் 2% கூடுதலாக சேர்த்து கடன் தொகைக்கு வட்டி வசூலிக்கப்படும்.
வங்கியின் வாடிக்கையாளரிடமிருந்து பொது மக்களிடமிருந்தும் அதிகளவு இட்டு வைப்பு பெறும் வகையிலும் பொது மக்களுக்கு கூடுதலாக வட்டி வழங்கும் வகையிலும் இவ்வகையான சிறப்பு நிரந்தர இட்டு வைப்பு அவ்வப்போது வங்கியால் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் பெறப்படும் நிலையில் இவ்வகையான டெபாசிட் குறைந்த அளவு 444 நாட்கள் அல்லது 555 நாட்கள் அல்லது வங்கிக்கு தேவைப்படும் குறிப்பிட்ட நாட்களுக்கு டெபாசிட்கள் பெறப்பட்டு அவ்வகையான டெபாசிட்களுக்கு வங்கியால் இயல்பாக வழங்கப்படும் டெபாசிட்களுக்குண்டான வட்டியை விட மிகவும் கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வங்கியில் பெறப்படும் சிறப்பு இட்டு வைப்பு டெபாசிட் 444 நாட்களுக்கு பெறப்பட்டு அதற்கு வட்டியாக 8.25% வழங்கப்பட்டு வருகிறது.
மேற்கண்டவாறு வாடிக்கையாளரிடமிருந்து பொது மக்களிடமிருந்தும் வங்கியானது இட்டுவைப்புகளை பெற்று அந்த இட்டு வைப்புகளுக்குண்டான வட்டியினை வழங்க வேண்டியுள்ள நிலையில் வங்கியிலிருந்து கடன்கள் அதிகளவு வழங்கப்பட்டு வருகிறது. அக்கடன்களுக்கு டெபாசிட்டிகளுக்கு வழங்கும் வட்டியைவிட கூடுதலாக வட்டி வசூலிக்கப்படும்.