செவ்வாய்ப்பேட்டை நகர கூட்டுறவு வங்கி லிட்.,

வங்கியின் சிறப்பம்சங்கள்

Image
Image

அரசாங்க பத்திரங்கள்

வங்கியின் பெறப்படும் டெபாசிட் தொகையை கருத்தில் கொண்டு இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி CRR 4.50% மற்றும் SLR 18% நிதியினை ஒதுக்கி வைத்துவிட்டு மீதமுள்ள நிதியினை வங்கியின் பயன்பாட்டிற்கு அதாவது கடன் வழங்குவதற்கு பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்படி நிபந்தனைகளுக்குப்பட்டு மாநில மற்றும் மத்திய அரசு கடன் பாத்திரங்களில் வங்கியானது முதலீடு செய்துள்ளது. தற்போது வங்கி அரசாங்க பத்திரங்களில் ரூ.28.51 கோடிக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது.

Image

முதலீடுகள்

வங்கி அரசாங்க பத்திரங்களில் இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி முதலீடு செய்யப்பட்டது போக மீதமுள்ள உபரி நிதியினை சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலும் மற்றும் அனுமதி பெற்று இதர கூட்டுறவு வங்கிகளிலும் முதலீடு செய்து வருகிறது.

வங்கியின் தற்போதைய நிலை

வங்கியானது 25 அ வகுப்பு உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 35539 அ வகுப்பு உறுப்பினர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது வங்கியில் 31 பணியாளர்களுடன் தலைமையகம் மற்றும் 7 கிளைகளை கொண்டு சிறப்பாக செயல்படுகிறது. வங்கியானது ரூ.11748.38 இலட்சம் இட்டுவைப்பு நிலுவையுடனும், ரூ,9196,54 இலட்சம் கடன் நிலுவையுடனும் செயல்பட்டுவருகிறது. C.D Ratio 77.28% மாக உள்ளது. 31.03.2024-இல் செய்திறனற்ற கடன் நிலுவை (NPA) ரூ352.79 இலட்சமாகவும் அதன் சதவிகிதம் 3.93% மாக உள்ளது. நிகர செயல்திறனற்ற கடன் (Net NPA) சதவிகிதம் 0% உள்ளது. வங்கியில் 31.03.2024-இல் CRAR 17.65% மாக உள்ளது. வங்கியின் நடைமுறை மூலதனம் ரூ.12,790.57 இலட்சமாக உள்ளது. வங்கியானது தொடர்ந்து இலாபம் ஈட்டும் வங்கியாக செயல்பட்டு வந்து கடந்த 31.03.2024-ல் ரூ.19.57 இலட்சம் இலாபம் ஈட்டி நல்ல நிலையில் செயல்பட்டு வருகிறது. வங்கியானது கடந்த RBI ஆய்வின்படி "B" Grade ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது. வங்கியின் வாராக்கடன் ஒதுக்கீடு ரூ.939.50 இலட்சமாக உள்ளது. இது தேவைப்படும் ஒதுக்கீட்டு தொகையை விட 3 மடங்கிற்கு மேல் ஒதுக்கீடு செய்து வங்கி மிக வலுவான நிலையில் செயல்பட்டு வருகிறது என பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.