Image
Image
செவ்வாய்ப்பேட்டை நகர கூட்டுறவு வங்கி லிட்.,

வங்கிக் கடன்கள்

வங்கி வாடிக்கையாளரிடமிருந்து பொது மக்களிடமிருந்தும் வங்கியானது இட்டுவைப்புகளை பெற்று அந்த இட்டு வைப்புகளுக்குண்டான வட்டியினை வழங்க வேண்டியுள்ள நிலையில் வங்கியிலிருந்து கடன்கள் அதிகளவு வழங்கப்பட்டு வருகிறது. அக்கடன்களுக்கு டெபாசிட்டிகளுக்கு வழங்கும் வட்டியைவிட கூடுதலாக வட்டி வசூலிக்கப்படும்.

  • 1. டெபாசிட் கடன்
  • 2. N.S.C/K.V.P. கடன் (தேசிய சேமிப்பு பத்திரம், கிசான் விகாஸ் பத்திரம்)
  • 3. நகைக்கடன்
  • 4. வீடு அடமானக்கடன்
  • 5. வீட்டு வசதிக்கடன்
  • 6. நுகர்பொருள் கடன்
  • 7. வாகனக்கடன்
  • 8. மகளிர் தொழில் முனைவோர் கடன்
  • 9. மாத வருமானம் பெறும் மகளிர் கடன்
  • 10. மகப்பேறு கடன்
  • 11. சிறுவணிக கடன்
  • 12. கல்விக்கடன்
  • 13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையோர் பொருளாதார மேம்பாட்டு கடன்
  • 14. மாற்று திறனாளிகடன்
  • 15. பணியாளர் கடன்கள்

1. டெபாசிட் கடன்

மேலே குறிப்பிட்டுள்ளவாறு இட்டு வைப்பு செய்துள்ள டெபாசிட்தாரர்கள் தாங்கள் இட்டு வைப்பு செய்துள்ள டெபாசிட் இரசீதின் பேரில் மேற்படி கடன் பெறலாம். இது இட்டு வைப்பு செய்துள்ள தொகையில் 85% தொகை மட்டும் கடனாக வழங்கப்படும். இக்கடனுக்கு இட்டு வைப்புக்கு வழங்கப்படும் வட்டியைவிட கூடுதலாக 2% வட்டி சேர்த்து வசூலிக்கப்படும். இக்கடனுக்குண்டான வட்டியை மாதாமாதம் செலுத்தலாம். அவ்வாறு செலுத்த இயலாத நேர்வில் டெபாசிட் முதிர்வடையும் தேதியில் அக்கடனுக்குண்டான அசல் மற்றும் வட்டி தொகை கணக்கீடு செய்து அத்தொகையினை பிடித்தம் செய்து கொண்டு மீதமுள்ள இட்டு வைப்பு தொகையினை மட்டும் வங்கியின் சேமிப்பு கணக்கு மூலம் வரவு வைத்து பெற்றுக் கொள்ளலாம்.

2. N.S.C/K.V.P கடன் (தேசிய சேமிப்பு பத்திரம், கிசான் விகாஸ் பத்திரம்) கணக்கு

மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய சேமிப்பு பத்திரம் மற்றும் கிசான் விகாஸ் பத்திரம் ஆகிய பத்திரங்களின் மீது சில நிபந்தனைகளுக்குட்பட்டு முதலீடு தொகையில் 85% வரை கடன் வழங்கும் வசதி உள்ளது. இக்கடன் 3 ஆண்டு காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும். அவ்வாறு கால நிர்ணயம் செய்யும் போது டெபாசிட்தாரர் கடன் பெறும் நபரால் வழங்கப்படும் பத்திரத்தில் முதிர்வு காலத்தை கணக்கில் கொண்டு மேற்படி முதிர்வு காலம் மூன்றாண்டுகளுக்கு மேல் இருக்கும்பட்சத்தில் அவருக்கு மூன்றாண்டுகளுக்கு மேல் கடன் கால நிர்ணயம் செய்யக்கூடாது. மூன்றாண்டுகளுக்கும் குறைவாக முதிர்வு தேதி இருக்கும்பட்சத்தில் கடன் வழங்கும் தேதியிலிருந்து முதிர்வு தேதி வரை மட்டுமே உள்ள காலத்திற்கு கடன் காலம் நிர்ணயம் செய்து கடன் வழங்க வேண்டும். இதற்க்கு 12% வட்டி வசூலிக்கப்படும்.

3. நகைக் கடன்

வங்கியின் வாடிக்கையாளர்களுக்கும் பொது மக்களுக்கும் தங்க நகை ஆபரணங்களின் பேரில் அன்றைய சந்தை மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டு அதில் 75% வரை உள்ள தொகை நகைக்கடனாக வழங்கப்பட்டு வருகிறது. இக்கடனுக்கு தற்போது 10.75% வட்டி வசூலிக்கப்பட்டு வருகிறது. இக்கடன்கள் ஒரு கடன்தாரர் ரூபாய் 4 லட்சத்துக்கு கீழ் கடன் பெறும் பொழுது அக்கடனுக்கு வாய்தா காலம் ஒரு வருடம் ஆகும். மேற்படி நகைக்கடன்கள் வங்கியில் அதிகளவு வழங்கப்பட்டு வருகிறது. வங்கியினால் பெறப்படும் இட்டு வைப்புகளின் பெரும் பகுதி நகைக்கடன்களாக வழங்கப்பட்டு வருகிறது. அதாவது வங்கியால் பெறப்பட்டுள்ள டெபாசிட் தொகையில் 80% மேல் நகைக்கடன்களாக வழங்கப்பட்டுள்ளது. ஒரு தனி நபருக்கு அதிகபட்சம் 30 இலட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது.

4. வீடு அடமானக் கடன்

வங்கியின் வாடிக்கையாளர்களுக்கும் பொது மக்ககளுக்கும் அசையா சொத்தின் ஆதரவின் பேரில் வீடு அடமானக் கடன் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக அதாவது வீடு மராமத்து பணி, தொழில் அபிவிருத்தி, மகன்/மகள் கல்வி மற்றும் திருமண செலவு போன்ற காரணங்களுக்காக அதிகபட்சமாக ரூ 25 இலட்சம் வரை ஐந்து வருடம் முதல் 10 வருடம் வரை அசல் மற்றும் வட்டி பிரதி மாதந்தோறும் செலுத்தும் வகையில் இக்கடன் வழங்கப்படுகிறது. தற்போது இக்கடனுக்கு 12% வட்டி வசூலிக்கப்படுகிறது. அசையா சொத்தினை வங்கியின் பெயருக்கு பதிவு செய்து தர வேண்டும்.

5. வீட்டு வசதிக் கடன்

மேலே குறிப்பிட்டுள்ளவாறு வங்கியின் வாடிக்கையாளர்களுக்கும் பொது மக்களுக்கும் அசையா சொத்தின் ஆதரவின் பேரில் வீட்டு வசதி கடன் சில குறிப்பிட்ட நிபந்தனைகளுக்குட்பட்டு வீடு கட்டும் காரணித்திற்காக அதிகபட்சமாக ரூ 30 இலட்சம் வரை ஐந்து வருடம் முதல் 10 வருடம் வரை அசல் மற்றும் வட்டி பிரதி மாதம்தோறும் செலுத்தும் வகையில் இக்கடன் வழங்கப்படுகிறது. தற்போது இக்கடனுக்கு 12% வட்டி வசூலிக்கப்படுகிறது. அசையா சொத்தினை வங்கியின் பெயருக்குபதிவு செய்து தர வேண்டும்.

6. நுகர்பொருள் கடன்

வங்கியின் வாடிக்கையாளர்களுக்கும் பொது மக்ககளுக்கும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அதாவது சம்பள சான்று அல்லது வீடு அடமானக்கடன் பெற்றவரின் பிணையில் மூலம் கடன்தாரர்கள் நுகர்பொருட்கள் கொள்முதல் செய்வதற்கு மேற்படி நுகர்பொருள் கடன் ரூ.1 லட்சத்துக்குள் வழங்கப்படுகிறது. மேற்படி கடனுக்கான காலம் 30 மாதங்கள் ஆகும். தற்போது இக்கடனுக்கு 12% வட்டி வசூலிக்கப்படுகிறது.

7. வாகனக் கடன்

வங்கியின் வாடிக்கையாளர்களுக்கும் பொது மக்களுக்கும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அதாவது சம்பள சான்று அல்லது வீடு அடமானக்கடன் பெற்றவரின் பிணையின் மூலம் கடன்தாரர்கள் இரண்டு சக்கர வாகனங்கள் கொள்முதல் செய்வதற்கு மேற்படி வாகன கடன் ரூ.1 இலட்சத்துக்குள் வழங்கப்படுகிறது. மேற்படி கடனுக்கான காலம் 30 மாதங்கள் ஆகும். தற்போது இக்கடனுக்கு 12% வட்டி வசூலிக்கப்படுகிறது.

8. மகளிர் தொழில் முனைவோர் கடன்

வங்கியின் மகளிர் வாடிக்கையாளர்களுக்கு சில நிபந்தனைக்கு உட்பட்டு மகளிரின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு மகளிர் தொழில் துவங்குவதற்கும் மற்றும் தொழில் மேம்பாட்டிற்கும் மகளிர் தொழில் முனைவோர் கடன் வழங்கப்படுகிறது. இக்கடன் சம்பள சான்று மற்றும் வீடு அடமானக்கடன் பெற்றவரின் பிணையின் மூலம் கடன்தாரர்களுக்கு தொழில் செய்வதற்கு மேற்படி மகளிர் தொழில் முனைவோர் கடன் ரூ.5 லட்சத்துக்குள் வழங்கப்படுகிறது. மேற்படி கடனுக்கான காலம் 30 மாதங்கள் ஆகும். தற்போது இக்கடனுக்கு 12%/ வட்டி வசூலிக்கப்படுகிறது.

இதைப்போலவே சில நிபந்தனைகளுக்குட்பட்டு மாத வருமானம் பெறும் மகளிர் கடன் மகளிரின் சமுதாய அந்தஸ்தை மேம்படுத்தும் பொருட்டு வழங்கப்படுகிறது. மேலும் மகளிருக்கு மகப்பேறு காலத்தில் பணத்தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு மகப்பேறு கடனும் மகளிர் மற்றும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் வியாபாரத்திற்க்காக சிறுவணிக கடனும் வழங்கப்படுகிறது.

9. கல்விக் கடன்

மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டும் எதிர்கால வாழ்க்கையினை கருத்தில் கொண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி கிடைக்க செய்வதற்கு மாணவ மாணவிகளுக்கான கல்விக்கடன்கள் வழங்கப்படுகிறது. இதற்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்து மேற்படி கல்வி கடனை பெறலாம். அதிகபட்சம் ரூ.5 இலட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படுகிறது. ரூ.1 இலட்சம் வரை பிணையம் இல்லாமலும் ரூ.1 இலட்சத்துக்கு மேல் பிணையத்துடனும் கடன் வழங்கப்படுகிறது.

மேலும், தமிழ்நாடு அரசினால் அவ்வப்போது அறிவிக்கப்படும் பொது நலன் சார்ந்த கடன் திட்டங்களுக்கு நமது வங்கியின் மூலம் கடன் வழங்கப்படுகிறது. இக்கடன்கள் மாநில அரசு மற்றும் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையோர் பொருளாதார மேம்பாட்டு கடன், மற்றும் மாற்று திறனாளிகடன் போன்று அரசு அறிவிக்கும் கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது.

10. பணியாளர் கடன்கள்

பணியாளர்களுக்கு பணியாளர்களின் பொருளாதார தேவையை பூர்த்தி செய்யும் விதமாக பணியாளர்களுக்கு பணியாளர் வீட்டு வசதி கடன், பணியாளர் வாகன கடன், பணியாளர் நுகர்பொருள்கடன், பணியாளர் தனிநபர் கடன், பணியாளரின் திருமணம் அல்லது மகள்/மகன் திருமணம் ஆகியவற்றிற்கான பணியாளர் திருமணக் கடன் போன்ற கடன்களும் வழங்கப்படுகிறது.