Image
Image
செவ்வாய்ப்பேட்டை நகர கூட்டுறவு வங்கி லிட்.,

எங்களைப் பற்றி

சேலம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்டுள்ளது செவ்வாய்ப்பேட்டை பகுதி ஆகும். இப்பகுதி மக்கள் வங்கி தோற்றுவிக்கப்படும் பொழுது அனைத்து விதமான வணிக வியாபாரங்களை மேற்கொண்டனர். அதாவது அரிசி வியாபாரம், பருப்பு வியாபாரம், மிளகாய் வியாபாரம், பூண்டு வியாபாரம் போன்ற அனைத்து மளிகை பொருட்களின் மொத்த வியாபாரமும், சில்லரை வியாபாரமும் நடைபெற்று வருகிறது. மேலும், அனைத்து விதமான அழகுசாதன பொருட்கள் முதற்கொண்டு வெள்ளி வியாபாரம், வாழ்க்கைக்கு தேவையான மற்றும் கட்டிடங்களுக்கு தேவையான அனைத்து பொருட்கள் சார்ந்த வியாபாரங்களும் மொத்தமாகவும் சில்லரையாகவும் நடைபெற்று வருகிறது. இப்பகுதி மக்களின் வியாபார அபிவிருத்தியை கருத்தில் கொண்டு இப்பகுதி மக்களுக்கு கடன் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் குறைந்த வட்டியில் அவர்களுக்கு தேவையான கடன்களை வழங்கி வங்கி சேவை புரிந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு செவ்வாய்ப்பேட்டை நகர கூட்டுறவு வங்கி இப்பகுதி மக்களின் நலன்களை பேணிப்பாதுகாக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட வங்கியாகும்.

செவ்வாய்ப்பேட்டை நகர கூட்டுறவு வங்கியானது சேலம் மாநகரின் மைய பகுதியான சேலம் மாநகராட்சிக்கு மிக அருகிலும் செவ்வாய்ப்பேட்டை தேர்நிலைக்கு அருகிலும் செயல்பட்டு வருகிறது. இவ்வங்கியானது 1932-ல் ஆகஸ்ட் மாதம் 19-ஆம் தேதி துவங்கி இன்று வரை செவ்வனே மக்களுக்கு சேவையாற்றி வருகிறது.

இவ்வங்கி செவ்வாய்ப்பேட்டை நகர கூட்டுறவு வங்கி லிட்., நெ.எஸ்.392. என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைமை அலுவலகம்:

வங்கியின் தலைமை அலுவலகம் 420/576 நாவலர் நெடுஞ்செழியன் சாலையிலுள்ள புதிய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. வங்கி தற்போது ஏழு கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. அந்தந்த பகுதி மக்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு அந்தந்த பகுதி மக்களுக்கு விரைவான வங்கி சேவை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கீழ்கண்ட விவரப்படி கிளைகள் வங்கி சேவை வழங்கி வருகிறது.

கிளைகள்:

# Name of Branch Branch Address E.mail Id Telephone No
1 Head Office 420/576 Navalar Nedunchelian Salai, Shevapet, Salem- 636 002. shevapeturbanbank@yahoo.co.in 0427-2210786
2 Kondalampatty Branch 311, Calicut Main Road, Kondalampatty, Salem- 636 010. shevapetucbkondbr@gmail.com 0427-2270088
3 Alagapuram Branch 7/3/57-4/1, Sri Jayalakshmi Shopping Plaza, Anna Salai, Swarnapuri, Salem- 636 004. shevapetucbalabr@gmail.com 0427-2449242
4 Komarasamypatty Branch 71/9-1, RAM Nagar, Komarasamypatty, Salem-636 007. shevapetucbkomabr@gmail.com 0427-2317566
5 Elampillai Branch 308, Motur, Elampillai – 637 502. shevapetucbelambr@gmail.com 0427-2901576
6 Kitchipalayam Branch 46/1, Narayana Nagar, IInd Cross, Kitchipalayam, Salem- 636 015. shevapetucbkitbr@gmail.com 0427-2901153
7 Karungalpatty Branch 5, Karungalpatty Main Road No.3, Salem – 636 006. shevapetucbkarubr@gmail.com 0427-2905340
8 Dadagapattygate Branch 435/1, Trichy Main Road, Dadagapatty Gate, Salem- 636 201. shevapetucbdadabr@gmail.com 0427-2904604

வங்கியின் நோக்கம்:

இப்பகுதியின் மக்களிடமிருந்து இட்டு வைப்புகளை பெற்று அந்த இட்டு வைப்புகளை பயன்படுத்தி இப்பகுதி மக்ககளுக்கு கடன் வழங்குவது என்பது வங்கியின் தலையாய நோக்கமாகும். மேலும் வங்கியினால் பல்வேறு இட்டு வைப்புகள் பெறப்பட்டு பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதைத்தவிர இப்பகுதி மக்களிடம் சேமிப்புகளை ஊக்குவிக்கும் பொருட்டும் இட்டு வைப்புகள் பெறப்பட்டு வருகிறது.

விவகார எல்லை:

வங்கியின் விவகார எல்லையானது சேலம் மாநகராட்சி எல்லையிலிருந்து 15 கீ.மீ. சுற்றளவு வரையானதாகும்.

உறுப்பினர் மற்றும் பங்குகள்:

வங்கியின் வாடிக்கையாளர்கள் பொதுமக்களும் குறைந்தபட்சம் ஒரு பங்குத் தொகை ரூ.100 செலுத்தி அ வகுப்பு உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம். மேலும் கடன்பெறும் உறுப்பினர் கடனின் அளவு, கடன் தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ---------க்கு 2.5% பங்குத் தொகையாக செலுத்த வேண்டும். இதுவே ---------க்கு 5% பங்கு தொகையாக செலுத்த வேண்டும். ஒரு உறுப்பினர் அதிகபட்சமாக 5 இலட்சம் வரை பங்கு தொகையாக செலுத்தலாம். வங்கியின் அனுமதிக்கப்பட்ட மூலதனம் 5 கோடி ஆகும். தற்போது வங்கி பெற்றுள்ள மூலதன பங்கு தொகை ரூ 3.06 கோடியாகும்.

நிதி ஆதாரங்கள்:

வங்கி வாடிக்கையாளரிடமிருந்து பொது மக்களிடமிருந்தும் கீழ்கண்டவாறு இட்டு வைப்புகளை பெற்று தன்னுடைய நிதி ஆதாரத்தினை பெருக்கிக் கொண்டு கடன்கள் வழங்கி வருகிறது.